Sunday, September 21, 2014

துலுக்க நாச்சியார் இயல் ஐந்து - thulakka nachiaar iyal five

நாயகியின் அழகை நேரில் காண விழைந்து ஏங்கி கொண்டிருந்தான் ரங்கன்.
எவ்வாறேனும் அவளை கண்டு விட வேண்டுமென்று அவள் இல்லம் நோக்கி புறப்பட்டான் . அதி காலையில் எழுந்து புழக்கடையில் குளிக்க வருவாள அல்லது வாசலில் கொலமிடுவாளா இல்லை சங்கீதம் வாசிப்பாளா என்று வீட்டையே சுற்றி வந்தான். அவள் அவன் கண்ணில் அகப்படவில்லை. சோர்ந்து பொய் விட்டு திண்ணையில் அமர்ந்தான். அப்பொழுது நிலக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது, திரும்பி பார்த்தான். தாரகை போல அவள்  பட்டாடை உடுத்தி அவன் முன்னே வந்தாள். பார்த்ததும் மயங்கி போய்விட்டான். அவனை கூட்டத்தின்  நடுவே பார்த்த நினைவு அவளுக்கு வரவே சற்று வெட்கத்தோடு தலை குனிந்தாள். பின் அதை மறைத்துக் கொண்டு "யார் நீங்கள்" என்று கேட்டாள். "நான் திருச்சிராப்பள்ளியிலிருந்து வருகிறேன். அழகர் கோவிலில் நடக்கும் யாகத்திற்காக வந்த அந்தணர்களில் ஒருவன்" என்றான்.  அவன் ஆயாசமாக இருப்பதை கண்டு "குடிப்பதற்கு ஏதேனும் வேண்டுமா, சற்று கலைப்பாருகிரீர்களா " என்றாள். அவன் அவளை தேடி அலைந்த கலைப்பு தந்த மயக்கத்தால், "நீங்கள் எங்கே குளித்தீர்கள்" என்றான். "என்ன உளறுகிறீர் " என்றாள். "இல்லை இல்லை நான் யாகத்திற்கு செல்லவிருப்பதால் குளிக்க வேண்டும். அது தான் குளிக்கும் இடம் எங்கு இருக்கிறது என்று கேட்க நினைத்தேன் மாற்றி உளறிவிட்டேன்". "உள்ளே முற்றத்தில் குளியுங்கள்" சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள். அவன் இன்னும் வராது இருப்பது கண்டு அவனை நோக்கி "என்ன சிந்தனை" என்று கேட்க, அவன் அவளை நினைத்து கவிதை ஒன்றை சொல்லிவிட்டான். அது என்னவென்றால்,

சிற்றிடையில் நூலாடை செருகி
நடையிட பிண்ணிடும் சடைகுழலென
செந்தாள் வரை  மூடி மேலெழும்பி
வலைக்  கொண்ட தென்னை உடலைச்
சுற்றி அம்மேல் முதிர்ந்த கனி அழகை
மூடியிட்டு கருங்கூந்தலொடு இயைந்து
கீழ் விழும் பொழுது பட்டுச் சேலையே !!
நீ பொன்வான எழிலிடுப்பை மூடாது
பார்த்த என் மனதை தீயில் இட்டு
வதைத்தாய். வெளிப்பட்ட வதனம்
வெறியினை ஊட்ட மூடியிட்ட அங்கம்
முள் என நெருட மனம் என்னும் மதகை
உடைத்து காதல் என்னும் காட்டாறு
கரைபுரண்டு ஓடுதடி நீந்த தெரியாமல்
மீள முடியாமல் தவிக்கிறேன் நானடி!!

  ஏதும் அறியாதவள் திகைத்து, "என்ன ? " என்று அதிர்ந்தாள். "என் மனம் கவர்ந்த பெண்னை நினைத்து உறங்கியதால் அவளை பற்றி கவிதை புனைந்து விட்டேன் ". "நீங்கள் யாகம் செய்ய வந்தவர்கள் போல தெரியவில்லையே, சென்று காரியத்தை கவனியுங்கள்" என்றாள். யாரை தேடி வந்தானோ அவளே தேடி வந்து பேசியதால் யாகம் செய்யாமலே வரம் கிடைத்தது போல் ஆனது.

பின்னர் யாகம் செய்ய ஆயத்தமாகி தெருவில் இறங்கி நடந்தான். அப்பொழுது அவன் உற்ற தோழன் ஒருவனையும் கண்டான். அவனுடன் சற்று அளவலாம் என்று அவனை நோக்கி நடந்தான். "கோவிந்தரே சௌக்கியமாக உள்ளாயா " என்று வினவினான். "நான் சௌகியமாகதான் உள்ளேன், நீ  எவ்வாறு உள்ளாய். மேலும் உன்னை நேரில் கண்டு நெடு நாட்கள் ஆகிவிட்டது. நாம் சென்ற வருடம் இதே உற்சவத்தில் பார்த்து கொண்டோம் மீண்டும் அதே உற்சவத்தில் காண்பது மகிழ்ச்சி " இவ்வாறு இருவரும் நாயகியின் அகத்து வாசலிலே நின்று பேச தொடங்கினர். "கோவிந்தா, அகத்தில் உன் மனையாள்
என்ன கூறுகிறாள், இரு  பிள்ளைகள்  பிறந்தும் உங்கள் காதல் குறையவில்லை போல் தோன்றுகிறதே, என்ன நான் சொல்வது சரியா" என்று கிண்டலாக வினவினான். "இல்லையப்பா  அவ்வாறெல்லாம் இப்பொழுது இல்லை, மாலை அகத்துக்கு சென்றாலே என்ன கோவத்துடன் காதிருப்பாளோ என்று பயமாய் இருக்கிறது". "அன்பா அவளின் கோபமே அவளிடம் நீ காதலை முன்பு போல் காட்டாதது தான். கலையில் நீயோ அலுவலுக்கு சென்று விடுகிறாய் உன் மூத்த மகனோ பாடசாலைக்கு சென்று விடுகிறான், இளைய குழந்தையுடன் சிறிது நேரம் கழிக்கிறாள் அது கொஞ்சி விளையாடும் பருவமும் அடையவில்லை பின்னர் அவள் என்ன தான் செய்வாள்". "நீ கூறுவதும் சரிதான் ஆனால் நான் என்ன செய்யட்டும் நீ தான் இதற்கு ஒரு உபாயம் கூறேன்". "உபாயம் ஒன்றும் பெரிதல்லே, எல்லாம் உன் மனதளவில் தான் உள்ளது. அவளிடம் உன் காதலை தெளிவுபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். " "நாளை அவளுக்கு பிறந்தநாள் அதை வைத்து ஏதேனும் ஒரு வழியை நீயே கூறிவிடு. அவளுக்கு என்ன பரிசு வாங்கலாம் "
"பரிசெல்லாம் ஒன்றும் தேவையில்லை, நீ நாளை அவளுக்கு முன் எழுந்து
அவளுக்காக குளிக்க வெண்ணீர் வைத்து விட்டு பின்னர் நீயே சென்று அவளை எழுப்பு. அழைத்து எழுப்பாதே, அவளை மெல்ல அணைத்து அவளது நெற்றியில் ஒரு சிறிய முத்தமிட்டு, செல்ல மொழி கூறி எழுப்பு. பின்னர் நீயே தலையில் என்னை வைத்து குளிப்பாட்டி அவள் அன்னையாக இரு. பின்பு அன்று அவள் கேட்பதெல்லாம் செய்து விடலாம் என்று மட்டும் என்னாதே. முடிந்தவரை செய் இயலவில்லை என்றால் காதல் மொழி கூறு. இதுவே எளிய வழி". இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த நாயகி "இவன் பெரிய சித்தன் போலும் " என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றால்.