Sunday, December 14, 2014

பஞ்சம் போக்கும் தஞ்சை நிலம்
இன்று நஞ்சு கலந்த தேரி நிலம்
நச்சு கலந்தது யாரு
எரிவாயு எடுக்கும் சில பேரு
நாம் பொருத்திருந்த காலம் போதும்
 திரள்வோம் ஒன்றாய் செய்வோம்
இங்கு பல மாற்றம்.

Monday, November 17, 2014

கவிதையின் அழகு சின்ன சின்ன பொய்கள்

கவிதையின் அழகு சின்ன சின்ன பொய்கள்
பெண்ணே உன் அழகு விழிகள் பேசும் மெய்கள்

உதடு என்றும்  பொய் சொல்லும் போதும்
விழிகள் சொல்லும் மெய் அழகு சேர்க்கும்

கண்ணாலே பார்த்தேன் கண்ணை பறிக்கும் அழகை
காதாலே கேட்டேன் நெஞ்சில் இனிக்கும் உன் பாட்டை

கண்ணை பறிக்கும் இந்த அழகு உன்னிடம்
மொத்தம் விழுங்க சொல்லி ஆசை என்னிடம்

Tuesday, October 14, 2014

வெட்டி வைத்த கட்டி வெண்ணிலவா
கட்டி இழுத்திடும் சொக்கு விழியா
எது எது என்னை இழுத்து நீ சொல்லடி

கண்ணை பார்த்து காதல் சொல்வேனா
மண்ணை பார்த்து தலை கவிழ்வேனா
எது எது எது நிகழ்ந்திடும் நீ சொல்லடி

ஐந்து நிமிடம் கூட இருந்தாய்
ஐம்பது வார்த்தை சொல்லி முடித்தாய்

எந்தன் மௌனம் களையும் முன்னே
வழிகள் அடைத்து விழி நனைத்தாய்

இது வரை தேடி  அலைந்தேனே
இன்று உன்னை கண்டு பிடித்தேனே
தேடும் பொருள் தானே வழி சொன்னதே

உயிருடன் உடல்  சேரும் முன்னே
காயம் பட்டு உடல் அழிவது ஏன்
உயிர் இனி வேறொரு உடல் தேடுமே

Sunday, September 21, 2014

துலுக்க நாச்சியார் இயல் ஐந்து - thulakka nachiaar iyal five

நாயகியின் அழகை நேரில் காண விழைந்து ஏங்கி கொண்டிருந்தான் ரங்கன்.
எவ்வாறேனும் அவளை கண்டு விட வேண்டுமென்று அவள் இல்லம் நோக்கி புறப்பட்டான் . அதி காலையில் எழுந்து புழக்கடையில் குளிக்க வருவாள அல்லது வாசலில் கொலமிடுவாளா இல்லை சங்கீதம் வாசிப்பாளா என்று வீட்டையே சுற்றி வந்தான். அவள் அவன் கண்ணில் அகப்படவில்லை. சோர்ந்து பொய் விட்டு திண்ணையில் அமர்ந்தான். அப்பொழுது நிலக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது, திரும்பி பார்த்தான். தாரகை போல அவள்  பட்டாடை உடுத்தி அவன் முன்னே வந்தாள். பார்த்ததும் மயங்கி போய்விட்டான். அவனை கூட்டத்தின்  நடுவே பார்த்த நினைவு அவளுக்கு வரவே சற்று வெட்கத்தோடு தலை குனிந்தாள். பின் அதை மறைத்துக் கொண்டு "யார் நீங்கள்" என்று கேட்டாள். "நான் திருச்சிராப்பள்ளியிலிருந்து வருகிறேன். அழகர் கோவிலில் நடக்கும் யாகத்திற்காக வந்த அந்தணர்களில் ஒருவன்" என்றான்.  அவன் ஆயாசமாக இருப்பதை கண்டு "குடிப்பதற்கு ஏதேனும் வேண்டுமா, சற்று கலைப்பாருகிரீர்களா " என்றாள். அவன் அவளை தேடி அலைந்த கலைப்பு தந்த மயக்கத்தால், "நீங்கள் எங்கே குளித்தீர்கள்" என்றான். "என்ன உளறுகிறீர் " என்றாள். "இல்லை இல்லை நான் யாகத்திற்கு செல்லவிருப்பதால் குளிக்க வேண்டும். அது தான் குளிக்கும் இடம் எங்கு இருக்கிறது என்று கேட்க நினைத்தேன் மாற்றி உளறிவிட்டேன்". "உள்ளே முற்றத்தில் குளியுங்கள்" சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள். அவன் இன்னும் வராது இருப்பது கண்டு அவனை நோக்கி "என்ன சிந்தனை" என்று கேட்க, அவன் அவளை நினைத்து கவிதை ஒன்றை சொல்லிவிட்டான். அது என்னவென்றால்,

சிற்றிடையில் நூலாடை செருகி
நடையிட பிண்ணிடும் சடைகுழலென
செந்தாள் வரை  மூடி மேலெழும்பி
வலைக்  கொண்ட தென்னை உடலைச்
சுற்றி அம்மேல் முதிர்ந்த கனி அழகை
மூடியிட்டு கருங்கூந்தலொடு இயைந்து
கீழ் விழும் பொழுது பட்டுச் சேலையே !!
நீ பொன்வான எழிலிடுப்பை மூடாது
பார்த்த என் மனதை தீயில் இட்டு
வதைத்தாய். வெளிப்பட்ட வதனம்
வெறியினை ஊட்ட மூடியிட்ட அங்கம்
முள் என நெருட மனம் என்னும் மதகை
உடைத்து காதல் என்னும் காட்டாறு
கரைபுரண்டு ஓடுதடி நீந்த தெரியாமல்
மீள முடியாமல் தவிக்கிறேன் நானடி!!

  ஏதும் அறியாதவள் திகைத்து, "என்ன ? " என்று அதிர்ந்தாள். "என் மனம் கவர்ந்த பெண்னை நினைத்து உறங்கியதால் அவளை பற்றி கவிதை புனைந்து விட்டேன் ". "நீங்கள் யாகம் செய்ய வந்தவர்கள் போல தெரியவில்லையே, சென்று காரியத்தை கவனியுங்கள்" என்றாள். யாரை தேடி வந்தானோ அவளே தேடி வந்து பேசியதால் யாகம் செய்யாமலே வரம் கிடைத்தது போல் ஆனது.

பின்னர் யாகம் செய்ய ஆயத்தமாகி தெருவில் இறங்கி நடந்தான். அப்பொழுது அவன் உற்ற தோழன் ஒருவனையும் கண்டான். அவனுடன் சற்று அளவலாம் என்று அவனை நோக்கி நடந்தான். "கோவிந்தரே சௌக்கியமாக உள்ளாயா " என்று வினவினான். "நான் சௌகியமாகதான் உள்ளேன், நீ  எவ்வாறு உள்ளாய். மேலும் உன்னை நேரில் கண்டு நெடு நாட்கள் ஆகிவிட்டது. நாம் சென்ற வருடம் இதே உற்சவத்தில் பார்த்து கொண்டோம் மீண்டும் அதே உற்சவத்தில் காண்பது மகிழ்ச்சி " இவ்வாறு இருவரும் நாயகியின் அகத்து வாசலிலே நின்று பேச தொடங்கினர். "கோவிந்தா, அகத்தில் உன் மனையாள்
என்ன கூறுகிறாள், இரு  பிள்ளைகள்  பிறந்தும் உங்கள் காதல் குறையவில்லை போல் தோன்றுகிறதே, என்ன நான் சொல்வது சரியா" என்று கிண்டலாக வினவினான். "இல்லையப்பா  அவ்வாறெல்லாம் இப்பொழுது இல்லை, மாலை அகத்துக்கு சென்றாலே என்ன கோவத்துடன் காதிருப்பாளோ என்று பயமாய் இருக்கிறது". "அன்பா அவளின் கோபமே அவளிடம் நீ காதலை முன்பு போல் காட்டாதது தான். கலையில் நீயோ அலுவலுக்கு சென்று விடுகிறாய் உன் மூத்த மகனோ பாடசாலைக்கு சென்று விடுகிறான், இளைய குழந்தையுடன் சிறிது நேரம் கழிக்கிறாள் அது கொஞ்சி விளையாடும் பருவமும் அடையவில்லை பின்னர் அவள் என்ன தான் செய்வாள்". "நீ கூறுவதும் சரிதான் ஆனால் நான் என்ன செய்யட்டும் நீ தான் இதற்கு ஒரு உபாயம் கூறேன்". "உபாயம் ஒன்றும் பெரிதல்லே, எல்லாம் உன் மனதளவில் தான் உள்ளது. அவளிடம் உன் காதலை தெளிவுபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். " "நாளை அவளுக்கு பிறந்தநாள் அதை வைத்து ஏதேனும் ஒரு வழியை நீயே கூறிவிடு. அவளுக்கு என்ன பரிசு வாங்கலாம் "
"பரிசெல்லாம் ஒன்றும் தேவையில்லை, நீ நாளை அவளுக்கு முன் எழுந்து
அவளுக்காக குளிக்க வெண்ணீர் வைத்து விட்டு பின்னர் நீயே சென்று அவளை எழுப்பு. அழைத்து எழுப்பாதே, அவளை மெல்ல அணைத்து அவளது நெற்றியில் ஒரு சிறிய முத்தமிட்டு, செல்ல மொழி கூறி எழுப்பு. பின்னர் நீயே தலையில் என்னை வைத்து குளிப்பாட்டி அவள் அன்னையாக இரு. பின்பு அன்று அவள் கேட்பதெல்லாம் செய்து விடலாம் என்று மட்டும் என்னாதே. முடிந்தவரை செய் இயலவில்லை என்றால் காதல் மொழி கூறு. இதுவே எளிய வழி". இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த நாயகி "இவன் பெரிய சித்தன் போலும் " என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றால்.


Sunday, August 24, 2014

Hate Me

If u can't love me..
pls try to hate me..


i tell the reason y to hate me.
if u can get it u wil luv me..
on the either u pls hate me..
if u will hate me..
u will think me..
i can onli luv u..
never i can hate u..
to wherever u go..
i come there with u..
all these i do..
bcoz i luv u..
and for these sake
u pls hate me..


i will fall as ur shadow
wen the ticks too go narrow..
the blink of ur eye..
it shows
the stars those
twinkle in the sky..
this puts my face in smile
but keeps my eyes too wide
for this sake
u pls hate me..


ur song in sollow ..
sounds so like sparrow..
i need it to borrow..
to keep off my sorrow..
to love is not feasible..
to hate is then your possible ?
if hate is not possible..
my state is so horrible..


after u hate for all these reasons..
there comes a season..
we both with hands together..
go round and round..
till there comes new sound..
none will be there to bound..
our love will never get wound.
we get wed in heaven
to live in peace..
till the birth of seven
இறுதியில் என் பயம் உடைக்கும் நாள் வந்து விட்டது. உன்னை சேரவே முடியாது என்று தெரிந்து விட்டது. மனம் தாங்க முடியாத வலி தான், இருந்தும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து என்னை உன்னுடன் சேர்க்குமா என்று ஏங்குகிறேன். தேடி வந்து வரம் தந்தவள் நீ இனி தேடினாலும் கிடைக்க  போவதில்லை என்பதே உண்மை. இரு தரப்பில் உள்ள காதல்  மட்டும் புனிதமல்ல ஒரு தலையாய் நேசிப்பதும் புனிதம் தான். என் காதல் என்னுள் வளர்ந்த உயிர் அணுவாகும் அதற்கு உன்  மனதானது இடம் தராததால் அழிந்து விட போவதில்லை. ஏனெனில் அது அழிவற்றது. யாருடைய கதையும் வீழ்ந்த இடத்தில முடிவதில்லை, என் கதையும் இனி தொடரும் அதில் இனி வரப் போகும் நபர்கள் யாரோ யாவரோ ஆன போதும் உன் காதல் தந்த நினைவுகள் என் வாழ்வை   வழி நடத்தி செல்லும். எதுக்காக நான் உன்னை பாக்கணும் இப்போ மறக்க முடியாம  தவிக்கணும். அவல அவள பாக்காம இருந்திருக்கலாம்  இருந்திருக்கலாம்  ஐந்து நிமிடம் அவ கூட கூட வாழாம இருந்திருக்கலாம். எல்லாம்  நடந்தது இப்போ  வாழ்க்கைல அவ இல்ல இது மட்டும் ஏன் ?

Friday, August 15, 2014

தேடி வந்து வரம் தந்தவள்

தேடி வந்து வரம் தந்தவள்
தேடினாலும் கிடைக்காது துலைந்துவிட்டாள்
ஏங்கி தினம் சாவது நானிங்கே

Sunday, July 27, 2014

துலுக்க நாச்சியார் இயல் நான்கு - thulakka nachiaar iyal four

முன்னுரையாக நாம் கதை மாந்தர்களையும் கதைக்கான காரணத்தையும், வரலாற்று சுவடுகலையும் கண்டு வந்ததால் காண தவறியதை இனி காண்போம், மதுரையின் எழிலையும், அரசவியின் அமைப்பு, கோட்டை அமைப்பு, ரங்கா நாயகியின் அழகிய வனப்பு மற்றும் ரங்கனின் திறனும் ரங்கா நாயகியை பற்றி புகழ் உரைப்பதும் என பல் வேறு நிகழ்வுகளை காணப் போகிறோம். இனி அதையெல்லாம் கண்டு களிப்போம். முதலில்  மதுரையை பற்றியும் அங்கு தங்கி இருக்கும் ஒற்றனாலும் வர விருக்கும்  கேடென்ன எனபது பற்றி காண்போம்

இரு கோட்டை சுவர்களைக் கொண்டு கம்பீரமாக விளங்கியது பாண்டிய நாடு. அரசரின் அரண்மனையை சுற்றிலும் பெரும் அகழிகளும் பலத்த கவல்களும் இருந்தன. மறுபுறம் பெரிய நந்தவனமும் எழில்மிகு சிற்ப வேலைபாடுகளும் சேர்ந்து மிக பரந்த அரண்மனையின் அழகை மேம்படுத்திக்  கொண்டு திகழ்ந்தது. அரண்மனையின் அகண்ட இடம், இன்னும் பல கலை வேலைபாடுகளை உண்ண துடித்து வாய் திறந்தே காத்திருந்தது. அங்கு தினமும் பல முக்கியமான வியாபாரிகளும் செல்வந்தர்களும் வந்து போவதாய் இருந்தாலும் எளிய மக்கள் மற்றும் புலவர்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தது. அவரவர் குறைகளையும், விண்ணபங்களையும் கூறி நிவர்த்தி செய்து கொண்டனர். மன்னர் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் எளிய குடிமக்களின் குறையை தீர்க்கவே பெரும் அமைப்புகள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. அவர்களின்  முறையானது கீழ்வருமாறு

பாண்டியனின் அரசவை ஐம்பெருங்குழுவாக பிரிக்கப்பட்டது. அவை யாதெனில் மாசனம், பார்ப்பார்,  மருத்தர், நிமித்தர், அமைச்சர். அரசனின் சேவையில் மேலும் எட்டு நபர்கள் நியமிக்கபட்டனர் . அவர்கள் எண்பேராயம் என வழங்கப்பட்டனர்.

மன்னன் தனது நாட்டை கூற்றங்கலாக பிரித்து ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒரு ஆளுநரை நியமித்தான். பொதுவாக இரு இளவரசர்கள் இருந்தால், மூத்தவர் மன்னராக, தலைநகரிலிருந்து செய்ய மற்றவர் ஒரு கூற்றத்திலிருந்து ஆட்சி செய்வார். ஒவ்வொரு கூற்றமும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு மண்டலமும் நாடு என பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டில் உள்ள கிராமங்கள் ஊர் என வகுத்து, ஒவ்வொரு ஊரின் உட்பிரிவுகள் சேரி என வழங்கப்பட்டன. ஊர்களின் ஆட்சி அங்குள்ள வயது முதியவரும் அறிவில் சிறந்தவருமாக இருப்பவரிடம் கொடுக்கப்பட்டது. இரு  அமைப்புகள் ஊர்களை ஆட்சி செய்தன. அவை மன்றம் மற்றும் அம்பலம். மன்றம் என்பது ஒரு சிறியஅமைப்பு, ஏதேனும் மரத்தின் கீழ் அமைக்கபெரும். அம்பலம் என்பது பெரிய அளவிலான அமைப்பு. அதற்க்கென  தனி கட்டிடம் உண்டு. இவை இரண்டும் ஊர்களின் பொது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு அரசாணையினை ஊருக்கு அறிவிப்பது நிலா ஆய்வு போன்ற வேலைகளை செய்தது. வரி வசூலிப்பது போன்றவை தனி அதிகாரிகளால் வசூலிக்கப்ட்டது.

இவை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் ஏனென்றால் நமது முன்னோர் கொண்ட ஆட்சி திறன், பாரதத்தின் பல இடங்களில் நாகரீகம் வளரும் முன்பே, தமிழர் ஆட்சி, அரசியல் இவைகளில் திறம் பெற தேர்ச்சி பெற்றவர் என்பதை பறைசாற்ற பட வேண்டும். மேலும் இக்கதையின் சில நிகழ்வுகளை  புரிந்து கொள்ள தேவை படும்.

இவ்வாறென பல போகங்கள் நிறைந்து இருந்தாலும், நாட்டிலும் அரச குடும்பத்திலும் சஞ்சலங்கள் இருக்கவே செய்தன. நாட்டில் இன்னும் சாதி வேறுபாடுகள் அதிகமாக துளிர் விட்டன. தேவதாசி முறையும் கடைபிடிக்க பட்டு வந்தது. தேவதாசிகள் இறைவனுக்காக வளர்க்கப்பட்டவர்கள். அவர்களை தேவர் அடிகளார் என்றும் அழைப்பர். இந்த வழிமுறை தான் பின்பு
தாசியாட்டம் என மருவ பட்டது அதற்க்கு காரணம் நமது தமிழ் மன்னர்களின்
ஆட்சி வீழ்ந்து அயலார் கைகளில் சிக்கிய பின் பல நூற்றாண்டுகளாய் சிதைக்கப்பட்டது . செல்வந்தர்களின் சுகத்துக்காக மாற்றி இயற்றப்பட்டது.அப்படி ஒரு தேவதாசியிடம் தான் பிரியா நாட்டியம் பயின்றாள்.  அங்கே அவளுக்கு உற்ற தோழி ஒருத்தியும் இருந்தாள். இருவரும் இணைந்தே நடனம் பயின்றனர்.  பாவத்திலும், அழகிலும், ஆட்டத்திலும் ஒருவருக்கொருவர் சலிதவரில்லை.

தமிழர்களுக்கு இடையே அவ்வப்பொழுது ஒற்றுமை குன்றியும் மிஞ்சியும் இருந்து வந்ததுள்ளது. முன்பு சோழ, சேர, பாண்டியர்களாய் பிரிந்து இருந்து போர் செய்தனர். இடையில் ஒரு நூற்றாண்டிற்கு மேல் ஒற்றுமை காத்தனர். மறுபடியும் சோழர் உயர்ந்தும் பாண்டியர் மறைந்தும், இப்பொழுது பாண்டியர் உயர்ந்தும் சோழர் மறித்தும் சேரர் ஒதுங்கியும் வாழ்கின்றனர். ஆயினும் மக்களிடையே ஓரின உணர்வு இருக்கவே செய்தது.

மேற்கண்டது நாட்டின் நிலையே. அரசவையை நோக்கி கவனிப்போம். ஒற்றன் சென்ற பிறகு அரசர் தமது இளவரசர்களை சந்திக்க நினைத்து அவர்களை அழைத்திருந்தார். பாட சாலையில் பயிற்சி பெற்று வரும் அவர்களும்  வந்து சேர்ந்தனர்.   மன்னர் காலை விடிந்தவுடன் அரசவையைக் கூட்டி தான் முக்கிய முடிவு எடுக்கப் போவதாகவும் பட்டம் சூடப் போகும் காரியம் என்றும் கூறி தனது அமைச்சர்களை அழைத்தார். இளவரசர்கள் வழக்கம் போல் போரபயிற்சிகள் மற்றும் இதர கலைப்பயிர்சிகள், அரச தந்திரம் முதலியவற்றை பயின்று அவரவருக்கான அந்தவனத்தில் தேவதாசிகளின் நடனங்களை கண்டு கொண்டிருந்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்தவர்கள் ஒற்றுமையுடன் வளர்ந்தவர்கள். மூத்தவன் பலத்த வீரனாக இருந்தாலும் விவேகத்தில் இளையவனை விட சற்றே தளைத்தவன். இந்த  தகவல் அரண்மனையில் உள்ள வீரர்களுக்கும் தெரிந்ததே. அவர்கள் இது பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளவும் செய்தனர். ஒற்றன்  விடுதிக்கருகில் இருந்த காவலர்களும்
இதைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை ஹோய்சால தூதன் கேட்டுக் கொண்டான். தன மன்னர் தம்மை இங்கு அனுப்பியது எதற்காகவோ அந்த தகவலை உறுதியாக அறிந்து கொண்டான்.  இவர்களைப் பற்றி அரசர் அறிந்திருந்ததால் பட்டத்தை சூட்டுவது  என்பது பற்றி ஆலோசிக்கவே அரசவையை கூட்டியிருந்தார். அங்கு வழக்கம் போல மூத்தவருக்கு என்று ஒரு கட்சியும் இளையவருக்கென்று ஒரு கட்சியும் இருந்தது.

அரசர் பேச்சை ஆரம்பித்து, "நான் அமைச்சர் பெருமக்களை வரச் சொல்லியதின் காரணத்தை அனைவரும் அறிந்திருப்பீர். எனினும் நானே உரைக்கிறேன். நம் இரு இளவரசர்களில் பட்டத்துக்கு தகுதியானவர் யார் என்பது பற்றி தங்கள் கருத்தை கூறுங்கள்". அவர்கள் கூறியது தான் தாமதம், ஆயத்தமாய் இருந்த மூத்தவரின் கட்சி ஒருமித்தமாக தன் வாக்கை அளித்தது. அரசர் தான் எதிர்பார்த்தது போல் நடக்கவே, புன்னகையுடன், இருவரின் தனிச் சிறப்புகள் தனித்தனியே எடுத்து கூறுங்கள்". என்றார்.

Saturday, July 26, 2014

மனம் என்னும் மதகை உடைத்து

மனம் என்னும் மதகை உடைத்து
காதல் என்னும் காட்டாறு  கரை
புரண்டு  ஓடுதடி
நீந்த தெரியாமல் மீள முடியாமல்
தவிக்கிறேன் நானடி
அக்கரையில் நீயும் செல்வதைக் கண்டேன்


Sunday, July 20, 2014

சிற்றிடையில் நூலாடை செருகி

சிற்றிடையில் நூலாடை செருகி
நடையிட பிண்ணிடும் சடைகுழலென
செந்தாள் வரை  மூடி மேலெழும்பி
வளைக் கொண்ட தென்னை உடலைச்
சுற்றி அம்மேல் முதிர்ந்த கனி  அழகை
மூடியிட்டு கருங்கூந்தலொடு இயைந்து
கீழ் விழும் பொழுது பட்டுச் சேலையே !!
நீ பொன்வான எழிலிடுப்பை மூடாது
பார்த்த என் மனதை தீயில் இட்டு
வதைத்தாய். வெளிப்பட்ட வதனம்
வெறியினை ஊட்ட மூடியிட்ட அங்கம்
முள் என நெருட மனம் என்னும் மதகை
உடைத்து காதல் என்னும் காட்டாறு
கரைபுரண்டு ஓடுதடி நீந்த தெரியாமல்
மீள முடியாமல் தவிக்கிறேன் நானடி

Monday, July 7, 2014

துலுக்க நாச்சியார் இயல் மூன்று - Thulakka nachiaar iyal moondru

ரங்க நாயகியின் இல்லம், மதுரையின் சுந்தரேஸ்வரர் கோவிலின் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ளது. அது ஒரு விசாலமான பரபரப்பான சாலையாகும். அங்கு ரங்கா நாயகியின் இல்லம் என்றால் அறியாதவர் இருப்பது அரிதாகும். ஆட்டம் முடித்து அன்று மதியமே இருவரும் கலை மண்டபத்தை விட்டு புறப்பட்டனர். அவர்கள் மாலை நேரம் வருமுன் வீடு வந்து அடைந்தனர். வரும் வழியில் தந்தை மகிழ்ச்சியுடன் தன் இரு மகள்களிடமும் பேச தொடங்கினார்.  "நாயகி நீ இன்று வெகு சிறப்பாக பாடினாயே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு தீரம் வந்தது அதிலும் ஒரு தாண்டவத்திற்கு ஏற்ற தலைப்பையும் பாடலையும் நீங்கள் இருவரும் வெகு சிறப்பாக அமைத்து விட்டீர்கள்". பணிவாக ரங்கா நாயகி கூறினால், ஏதும் பெரிதான ஒன்றை செய்துவிடவில்லை. நம் மன்னரின் கீர்த்தியை என்றாவது இப்படி பாட வேண்டும் என்று ஆசைப்பட்டோம், பாடிவிட்டோம். அது மட்டும் இல்லை தாங்கள் மற்றும், நம் சுற்றத்தார் அனைவரின் ஆசியும் இருப்பதால், மேலும் சிறப்பாக அமைந்தது. நன்று மகளே, எங்கள் ஆசி உனக்கு என்றும் உண்டு, வரும் காலங்களில் நீ அறிய சாதனைகளை வேண்டும். சாதனைகளை   விட உன்னத சேவை செய்தால் போதும் தந்தையே! இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர்.
கலைஞர்கள் என்றால் போட்டியும் பொறாமையும் தேடி வரும் உற்றார் ஆகிவிடும். அதற்கேற்ப அங்கு மற்றொரு பாடகியும் இருந்தால், அவன் தான் சிந்தாமணி. அவளும் கலையில் ரங்கா நாயகிக்கு குறைந்தவள் இல்லை, ஆயினும் தன்னை விட அவள் பெயர் புகழீட்டுவதை சகித்து கொள்ளாது  தவிப்பவள். அவர்கள் இருவருக்கும் இடையே மனப்புழுக்கம் நாளுக்கு நாள் பெருகியது. ரங்கா நாயகி, சிந்தாமணியை பற்றி யாரிடமும்  புறம்பு கூறுவதுமில்லை , என்றாலும், அவளை தனக்கு போட்டியாகவே கருதி வந்தால். சிந்தாமணியும் ரங்கா நாயகி பற்றி யார் பேச கேட்டாலும் முகத்தை  திருப்பிக்கொண்டு போய் விடுவாள்.

இவ்வாறிருக்க, அவர்களை தங்கள் வீடு வந்து சேர்ந்ததும், அவர்களின் தாய் மகிழ்ச்சியுடன் உள்ளே வரவேற்றாள். வாருங்கள் வாருங்கள்,  இன்று தங்களை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருகின்றனர். பெருமிதம் கொள்கிறேன் உங்களை நினைத்து. தந்தையும் பாராட்டை மீண்டும் தொடர காத்திருந்தவர் போலும், ஆமாம் ஆமாம் அசதி விட்டனர், இவர்கள்  இருவரும். இவர்களை பற்றி தான் இந்த ஊரே மெச்சி கொள்கிறது. இவ்வாறு இருக்கையில் அங்கு அந்தணர் நால்வர் வந்து அழைகின்றனர். யாரது? உள்ளே வாருங்கள் என்றார் மணி. உள்ளே வந்தவர்களை கண்டு ஆற தழுவி, வாருங்கள் பட்டரே வாருங்கள் என்றார். ஆம்! வந்தவர் அழகர் கோவிலின் பட்டரே ஆவர். உற்சவ காலம் நிகழ்வதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அன்று மாலை நடக்க இருக்கும் கருட வாகனம் மிக பிரசதியான ஒன்று, அதற்க்கு மேலும் சிறப்பூட்ட  நாயகியின் கச்சேரியை அமைக்க முடிவுச் செய்தனர்.

நேற்று சிந்தாமணியின் நிகழ்ச்சி நிகழ்ந்தது. அவள் மிக சிறப்பாக பாடிவிட்டால். அதனால் எனவோ, கூட்டம் இன்று அதிக அளவில் திரண்டு வந்துள்ளனர். அது மட்டுமில்லாது நீங்கள் அரசரின் பாராட்டை பெற்றதையும் அனைவரும் அறிந்திருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஆகவே உங்களை இன்று பாட வருமாறு அழைக்க வந்தோம்! என்றார் பட்டர். தனக்கு  முன்பு சிந்தாமணி பாடிவிட்டால் என்பதும்  நாயகிக்கு சிறிது மன குமைச்சல் தந்தாலும், இறையடியாரின் கோரிக்கை என்பதாலும், தான் அவளை விட சிறப்பாக பாடிக் காட்ட வேண்டும் என்ற துடிப்பிலும் பாட ஒப்புக்கொண்டாள். மாலை நெருங்கிவிட்டது அவளும் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, புரவி வாகனத்தில் ஏறி புறப்பட்டாள். தன் மகளின் சிறப்பை காண பெற்றோரும், தன் தமக்கையின் சிறப்பை காண ப்ரியாவும் புறப்பட்டனர். விழ ஆரம்பித்தது, ரங்கா நாயகிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து மேடைக்கு அழைத்தனர். பட்டர் கள்ளழகரை புகழ்ந்து பாசுரங்கள்  பாடிய பிறகு, அவர் அருளால் பாட வந்திருக்கும் ரங்கா நாயகியையும் புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை தொடங்குமாறு அறிவித்தார். விழாவிற்கு தலைமை தாங்கி வந்திருந்தார், அமைச்சர் இளம்பருதி. ரங்கா நாயகியும் பாட ஆரம்பித்தால், அவள் பாடிய பாடலானது பின் வருமாறு.

விண் அளந்தான் உலகம் அளந்தான்
குமரி பருவ ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான் வங்க
கடல் கடைந்தான் கடைந்து முகர்ந்த
நீரை மழையாக தரும் மேகமென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம் கோமான் அன்பர்க்
கெல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே!

 அவளின் குரளின்பதை ரசித்தவன் அவளின் முகப்பொலிவையும் பார்த்து வியந்து  போனான். அவளை சற்று அருகே கண்டு களிக்க கூட்டத்தை கலைத்துக் கொண்டு முன் செல்ல முயன்றான். பூர்ண சந்திரன் போன்ற பொலிவுடன், தோன்றினாள்  அவளது  பெரிய நெற்றியும் அதில் சூடிய சுட்டியும் அழகிய பொட்டும் தழைத்த கூந்தலில் நிறைந்து சூடிய மல்லிகைப்
பூவும் மனம் கவர்ந்தது.

அனால் முன்வரிசையில் உட்கார அனுமதியில்லாததால், அவனை அரண்மனை காவல் ஆட்கள் அப்புற படுத்த, அவனை பிடித்து இழுத்தனர். ஆனாலும் வைத்த  கண் மாறாமல்  அவளைப் பார்த்தபடியே  நகர்ந்தான். கூடத்தில் நடந்த சலசலப்பை கவனித்த  ரங்க நாயகி பாட்டில் கவனித்து இருந்தாலும் நடந்த சலசலப்பையும் கவனித்தாள். அவர்கள் ரங்கனை இழுத்து செல்வதையும் அவன் தன்னையே உற்று பார்ப்பதையும் கவனித்த ரங்க நாயகி வெட்க புன்னகையுடன் பாட்டை தொடர்ந்தாள். தன்னை நோக்கி அவள் புன்னகை செய்வதை என்னி  ரங்கனும் தனக்குள் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.

முற்றும்

Saturday, June 14, 2014

காலம் மாறி போகும்

காலம் மாறி போகும்
நம் காயம் ஆரி போகும்
கண்கள் சிந்திய துளிகள் நம்
கையில் முத்தாய் மாறும்
மனதில் உறங்கோண்டு
அச்சம் புறங்கண்டு
எள்ளி நகையாடு

தடைகளை தினம் தினம் உடை
சரித்திரம் படைத்திட நினை
மனதினில் துணிச்சலே துணை
 வரலாறு காணப்போகும் சாதனை

Friday, June 13, 2014

மீண்டும் பிறந்தோம்

ஒரு திரைப்பட இயக்குனர் தன் திரைப்பட காட்சி ஒன்றை எடுபதற்காக மலை உச்சியில் நாயகியுடன் நிற்கிறார். அந்த நாயகியை அவர் ஆழமாக நேசிக்கிறார் . இந்த திரைப்படம் முடிந்தவுடன் அவளிடம் தன் காதலை சொல்லி அவளை கைபிடிக்க நினைத்தான். அவளின் காதலினால் தான் அவன் இயக்குனர் ஆனான். காட்சி விளக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் மலையிலிருந்து விழுந்து விடுங்கின்றனர். விழும் தருவாயில் தனது காதலை சொல்லிவிடுகிறான் இயக்குனர். காதலியை காக்க முயற்சிக்கிறான். நாயகி தன காதலை ஏற்க மறுப்பதால் அவளை காப்பாற்றி அவன் தன் கையேடு சேர்த்து தன்  உயிரையும் விடுகிறான். பின்னர் ஒரு விபத்தினால் அவளும் இறக்கிறாள். இருவரும் மீண்டும் பிறக்கின்றனர், ஒரு சந்திப்பால் அவள் அவனை அறிகிறாள் அனால் அவன் மறந்தே இருக்கிறான்.  இவ்வாறு இருக்க அவனுக்கு திருமணம்  நிலையில் அவன் படி ஏறி தன்னை பற்றியும் தங்கள் காதல் பற்றியும் கூறி அழுகிறாள், அவன் கலங்கிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுகிறான். அப்பொழுது ஒரு அபாய கட்டத்தில்  சிக்கி கொள்ள பின் எப்படி சேர்ந்தனர் எனபது மீதி /கதை.

Sunday, May 25, 2014

துலுக்க நாச்சியார் இயல் இரண்டு

 அரசவை
கலை மண்டபத்திலிருந்து புறப்பட்ட மன்னன் நேரே அரசவைக்கு வந்தான். அவனுக்கு  முழக்கத்துடன் ,  புகழும் வாச்கிக்கபட்டது.

மும்முடி  தேவர், கொல்லம் கொண்டான் ,
 கோ நேர் இன்மை கொண்டான் ,
ஸ்ரீ கோ மாறவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ குலசேகர தேவர்
வரார்! வரார்!!


தொடர்ந்து அரசவையில் என்ன நடந்தது என்பதை பின்வரும் உரையாடல் வழியே அறியலாம்.

சிம்மாசனத்தில் அமர்ந்த அரசன், அன்று வந்த தூதுவனை அழைத்து வருமாறு உத்தரவு இட்டான். உடனே காவலாலிகல் ஹோய்சால நாட்டு தூதுவனை அழைத்து வந்தனர்.

தூதுவன்: தமிழகம் மட்டுமல்லாது திராவிடம் முழுவதும் போற்றும் மாமன்னர், மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனுக்கு ஹோய்சால நாட்டு தூதுவனின் மதிப்பிற்குரிய வணக்கம்!

மன்னன்: வரவேண்டும் தூதுவனே! உங்கள் நாட்டு மன்னனும் மக்களும் நலமா?

தூதுவன்: யாவரும் நலமே

மன்னன்: மகிழ்ச்சி

பின் மன்னன் அமைச்சரை நோக்கி தகவலை அறியுமாறு ஏவினான்

இளம்பருதி: நீவிர் கொண்டு வந்த செய்தி யாதென இவ்வரசவை  அறியுமாறு உரைப்பாயாக

தூதுவன் :  நன்றி மன்னா! இவ்வரசவைக்கு கொண்டு வந்த செய்தி யாதெனில் ஹோய்சால நாட்டு மன்னரான மூன்றாம் பலாலர் இரு நாட்டிற்க்கும் இடையே நல்லுரவு அமைய, மாமன்னருடன், சிறிது காலம் தங்கி இருந்து
 நட்புரவாட விருப்பம் தெரிவித்துள்ளார். தங்கள் அழைப்பிற்காக  காத்திருக்கிறார்.

இளம்பரிதி: நட்புரவாட வருவோர் யாராயினும் அன்புடன் வரவேர்த்து விருந்தோம்பல் செய்வது தமிழர் வழக்கம். வரவேற்பதில் முரண்பாடில்லை. வரவிருக்கும் திகதி யாதென செய்தி உண்டா?

தூதுவன்: தங்களுக்கு உகந்த திகதி எதுவாயினும் அன்றே விஜயம் செய்ய சம்மதம் எனபது செய்தி அரசே!

மீண்டும் அரசர் அமைச்சரை நோக்கினார்

இளம்பருதி: நன்றி தூதுவனே! திகதி யாதென அரசருடன் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். அது வரையில் நீர் உமக்கென தயார் செய்யப்பட்ட அரையில் தங்கி இரு. உனக்கு தேவையான பனிவிடைகள் அறுசுவை உணவுகள் யாதும் காலம் தாழ்த்தாது வழங்கப்படும். காவலாளிகள் அவரை அழைத்து செல்லுங்கள்.

அவன் சென்ற பின்னர் அமைச்சர் உரையாடலை தொடங்கினார்

இளம்பருதி: அரசே, வீர பலாலன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர பல முறை முயற்சி செய்து தோற்று போனவன். அவன் நட்புரவாட வருவதென்றால் சிறிது கவனம் தேவை.

மன்னன்: அதற்காக நமது நாட்டிற்க்கு வருவதை வேண்டாம்  என்று சொல்வது நமக்கு இழிவாகும்

இளம்பருதி: மாமன்னா! அவன் வருவதை வேண்டாம் என்று  கூறவில்லை, ஆனால் அவனோடு உறவாடுகையில் சிறிது கவனம் தேவை என்பதே என் கருத்து.

மன்னன்: ஒப்புகொள்கிறேன் அமைச்சரே! மட்டற்ற அமைச்சர்கள் யாரேனும் கருது வைத்திருந்தால் உடனே கூற வேண்டும் !

மற்ற அமைச்சர்கள் ஒருங்கிணைந்த குரலில் "முதலமைச்சர் கூறுவதே  எங்கள் கருத்தும். நாங்கள் அதை ஏற்கிறோம்" என்றனர்.

மன்னன்: நன்றி பெருமக்களே! இனி வீர பலாலனை வரவேற்கும் திகதியை கணித்திருந்தால் சொல்லி விடுங்கள்.

இளம்பருதி: அடுத்த திங்களுக்கு வர சொல்வது சரியாக இருக்கும் அரசே!

மன்னன்:  ஆகட்டும்! அதுவே மன்னன் முடிவென்று கூறி தூதுவனை அனுப்பி வையுங்கள்.

Sunday, May 18, 2014

துலுக்க நாச்சியார் இயல் ஒன்று

பாண்டிய நாட்டை சோழர்களிடமிருந்து மீட்டப் பின் தமிழகம் முழுவதும் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. அதனை  முதலாம் சுந்தர பாண்டியனின் சிறப்பாக ஆட்சி செய்தான்,  அவனுக்கு பின் மாறவர்மன் குலசேகர பாண்டியன் நாற்பது ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆட்சி செய்தான். வடக்கே சாளுக்கியர்களை வீழ்த்தி ஹோய்சாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அக்காலம் மூன்றாம் வீர பலால ஆண்டு கொண்டிருந்தான் அவன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையினால் அடிக்கடி பாண்டிய நாட்டின் அரசியலில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சித்து கொண்டிருந்தான் .பாண்டியர்கள் பொதுவாக ஒரு மன்னன் தலைநகரிலிருந்து ஆட்சி செய்ய, இளவரசர்கள் கூற்றம் என்னும் சித்ற்றரசுகளுக்கு பொறுப்பு வகித்தனர். அவ்வகையில் மூன்றாம் சுந்தர பாண்டியன் அரசனாக தலைநகரிலிருந்து ஆட்சி செய்யவும், இரண்டாம் வீர பாண்டியன் கொர்கையிளிருந்து ஆட்சி செய்யுமாறு முடிவு செய்தான் தந்தை குலசேகர பாண்டியன். இதனை துடுப்பாக எடுத்து சகோதிரர்களுக்குள்ளே  கலகம் ஏற்படுத்த காத்திருந்தான் வீர பலாளன்.

இவ்வாறென கதை தொடங்க பெறுகிறது.  அத்தியாயம் பாண்டியனின் கலை மண்டபத்தில் தொடங்குகிறது. நாம் காணவிருக்கும்  காட்சியானது, கலை மண்டபத்தில் நித்தம்  நித்தம் நடைப்பெறும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி.

 கலை மண்டபம் :

சிறப்பான ஆட்சி செய்யும் குலசேகரனின் அரசவையாகும். குலசேகர பாண்டியன் பல கலைகளை வளர்த்து சிறப்பு செய்து கொண்டிருந்தான். அவன் ஆட்சியில் வர்த்தகம் தலை சிறந்து விளங்கியது. சோழர்கள் கட்டி அமைத்த கோவில்கள் ஆனாலும், அதற்கும் மானியம் வழங்கி சிறப்பு செய்தான், பாண்டிய மன்னன். அவனது அவையில் நித்தமும் ஆடல் பாடல் என பல கலைஞர்கள் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு பெற்று  செல்வது உண்டு. எனினும், அவன் அரசவையின் கணக்கரின் மகள்கலான நாயகி, மற்றும் ஹரிப்ரிய நித்தமும் ஆடி பாடி முடித்த  பின்னரே, மற்றவர்கள் தொடங்குவார்கள் . அவ்விதம் அவ்விருவரும் கலையில்  தேர்ச்சி பெற்றிருந்தனர் . அன்றைய தினம் ரங்கா நாயகி, முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை பற்றி தாண்டவ வடிவத்தில் பாடி  கொண்டிருந்தாள்,அதற்க்கு ஹரிப்ரிய அந்த உமையே தாண்டவம்  ஆடுவதை போல அடி கொண்டிருந்தாள்.  தமிழகத்தின் தலைச் சிறந்த அரசான சோழ பேரரசை நிறுவித்த இராச இராச சோழன், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் வானுயர்ந்த பெரிய கோவிலை கட்டினார். அவரின் மகனான இராசேந்திர சோழனோ  தென் இந்தியா மற்றும் வங்காளம் முழுவதும் அல்லது கடாரம், போன்ற தீவுகளையும் சொழன் பிராந்தியத்தில் சேர்த்தார். அவர்களுக்கு பின்  வந்த மன்னர்களின் திறம் சற்று  குறைய குறைய, பகையுடன் காத்திருந்த சடியவர்மன், சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு எதிரான  படை ஒன்றை  திரட்டி, அவர்களை வென்றான். பாண்டியர்களின்  வம்சத்தில்,சிவனுக்கு நிகராக போற்றப்படுபவர் சடையவர்மன்  என்றும்,திருமாலுக்கு இனையாக போற்றப்படுபவர் மாறவர்மன் என்றும் சிறப்பு பெயர்கள் கொண்டிருந்தனர். அவ்வகையில் சுந்தர பாண்டியன் சிவனுக்கு நிகராக போற்றப்பெற்றதால் சடையவர்மன் என்ற பெயருடன் முடிசூடப்பெற்றான். அவன் சேரர்களையும் வென்று மும்முடி பாண்டியன் என்று போற்றப்பெற்றான். அவனது மெய் கீர்தியைதான் அன்று ரங்கா நாயகி பாடி கொண்டிருந்தாள். அவள் பாடிய பாடல் பின் வருமாறு  மன்னனின் கலை மண்டபத்தில் மிக விமர்சையாக நிகழ்ந்து கொண்டிருந்தது .

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்திடும் வெற்றி

அடி வை அடி வை பகைத்தோர்  கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

பிறை கழற்றி சடைக் கலைந்து
தகதக  தகவென கண் சிவந்து
விறுவிறு விறுவென நான் புடைத்து
முறு முறுவென மீசை முறுக்கி

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி என் அச்சத்தை சுடு

தடதட தடவென புரவிகள் புழுதினை பரப்பிட
இடிப்பட  பொடிப்பட தடைகளை தாக்கிட
முட்டிடு உருட்டிடு உருவங்கள் சிதைந்திட
மகிழ்ந்திடு நெகிழ்ந்திடு தோற்றவர் எதிர்ப்பட

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

இந்நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் ஒரு முக்கிய செய்தி அரசவைக்கு வருகிறது, கொண்டு வந்திருப்பவன் ஹோய்சால  நாட்டிலிருந்து வந்திருக்கும் தூதுவன்.அச்செய்தியை படித்ததும், அவசரமாக ஆலோசனை செய்ய  வேண்டும் என்று முதல் அமைச்சர் கூற, மன்னன் ஹரிப்ரியவின் ஆட்டம் முடிந்தவுடன், அவர்களின் ஆட்டத்தில்  தாம் மிகவும் மகிழ்ந்து மூழ்கிவிட்டதாக கூறி என்றும் இல்லாத அளவிற்கு  பொன்னும் பொருளும்  அல்லி வழங்கினான்.   அவளது தாண்டவ நடனத்தை  பார்க்கும் பொழுது அந்த உமையே ஆடினாலோ அல்லது சிவா பெருமானே பெண் உருக்கொண்டு ஆடினானோ என்று மெய் சிலிர்க்கும் விதம் இருந்தது  என்றான்.மேலும் ரங்கா நாயகியின் சிறப்பான பாடலினாலும் அவளது ஓங்கி ஒலித்த குரலினாலும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மெய் கீர்த்தி தன்னை தொட்டு பார்த்து விட்டது என்னை  வீழாதே என்றும் யார் தாலும் பணியாதே என்று அம்மாமன்னர் தன் முன் வந்து கூறியது போல இருந்தது என்றான். ஆன பொழுதும் அன்று பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை காணாமல் அரசவையை அவசரமாக கூட்டினான்.


Saturday, May 17, 2014

துலுக்க நாச்சியார்

 துலுக்க வேட்டையர்கள் பாரத கண்டம் முழுவதும் பல ஆட்சிகளை சதியால் வீழ்த்தி அதன் மூலம் பறிக்கப்பட்ட நாட்டிலிருந்த பல கோவில்களை சூறையாடினர். அங்கு நிறுவப்பட்ட இறைவனின் உருவ சிலைகலை  உடைத்தெறிந்தனர், அதோடு நில்லாது பொன் உருவங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றனர். இந்த வெறி செயல்களை எல்லாம் பொறுக்காது பல பக்தர்களும், சிற்றரசர்களும் செய்வதறியாது தவித்தனர். அந்த வேட்டயர்களில் ஒருவனான அலாவுதீன் கில்ஜி பாரதம் முழுவதையும் தான் ஆட்சி செய்ய நிறைய பொருள் தேவைப்பட்டது அவ்வாறு தேவைப்பட்டதை பிற அரசுகளிடம் இருந்து கொள்ளையடித்தான் . பின் தென் திசையில் பாண்டிய நாட்டின் வளமும், பாதுகாப்பும் பற்றி அறிந்து பெரும் படியுடன் வந்து சேர்ந்தான். அவன் மதுரையை அடையும் வழியில் திருவரங்கத்தை கண்டான். அதன் பிரம்மாண்டத்தை கண்ட வியந்தவன் அதை கொள்ளையடிக்க முற்பட்டான் ஆனால் மதுரை வேந்தரை தோர்க்கடித்தால்  அது  நடக்கும் என்பதால் சுந்தர பாண்டியனோடு துவந்த யுத்தம் செய்தான். இறுதியில் சுந்தர பாண்டியன் தோர்த்து  விடவே திருவரங்கத்து கோவிலை வேட்டை ஆட தொடங்கினான்.அவன் அதன் ஏழு பிரேகாரத்தை சுற்றி வரவே மூன்று நாட்கள் ஆனது. பாண்டிய ஆட்சி விழ்ச்சி கண்டதால் வேதம் ஓதும் அந்தணர்கள் தாமே போருக்குள் இறங்கினர், சுல்தானை தடுத்து நிறுத்தினர், அவன் வருவதற்குள் கருவறையை கருங்கல்சுவற்றால் மூடி விட்டனர். ஆனாலும் உற்சவர் சிலையை சுல்தான் கைப்பற்றி டெல்லி எடுத்து சென்றான். அதை எவ்வாறு மீட்டனர் என்பது தொடரும் கதை. இதில் வரலாற்றுடன் கற்பனையாக ரங்கன் ரங்கா நாயகி ஆகிய கதை பாத்திரங்களையும், அவர்களுக்குள் இருந்த  மோதல்,காதல், அவர்கள்  இனைந்து எவ்வாறு உற்சவரை மீட்டனர் என்பது நாடகமாகும்.

 சித்தரிக்கப்பட்ட கதை பாத்திரங்கள்
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
இரண்டாம் சடையவர்மன் வீர பாண்டியன்
தலைமை அமைச்சர் இளம்பருதி
அமைச்சார் சோம்பன் சாம்பவன்
கணக்கர் விஷ்ணு மணி
கணக்கரின் மகள்கள் ரங்கா நாயகி, ஹரிப்ரிய
கதையின் நாயகன், ரங்கன்
சுல்தான் அலாவுதீன் கில்ஜி
மாலிக் கபூர்
ஹோய்சால மூன்றாம் மன்னன் வீர பலால


அத்தியாயங்கள்
1. பாண்டிய நாட்டு அரசியல் குழப்பங்கள்
2. ரங்கன், ரங்கா நாயகி காதல்
3. துலுக்கர்களின் அட்டூழியம்
4. மதுரையின் முற்றுகை
5. திருவரங்கத்து வேட்டை
6. அந்தணர்களின் போராட்டம்
7. ரங்கன் தலைமையில் யுத்தம்
8. ரங்கன் ரங்கா நாயகி உற்சவரை மீட்டல்
9. சுரதானியின்   ஏக்கம்
10. சுரதானியின் மரணம்
11. துலுக்க நாச்சியார்
12. மாலிக் கபூர் மீண்டும் படையெடுப்பு
13. தேவதாசிகள் பனி
14. இறுதியில சமாதனாம் 
15. இரு உற்சவரின் சமாதானம்

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்தது வெற்றி

அடி வை அடி வை புலிக்கொடி வில் கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி ஏன் அச்சத்தை சுடு

Friday, April 25, 2014

வான் முட்டும் நெற்போர் உயர வக்கற்று

வான் முட்டும் நெற்போர் உயர வக்கற்று
கண்முன் திரட்டும் வைக்கோற்போர் ஆகிற்று
செந்நெல் ஊடு கயல் உகளும்  நன்னிலம்  வற்றி
செம்மணல் ஊடு வெயில் சுடும்  நிலமான தேறி

Monday, April 14, 2014

நான் வாழ்ந்த காலம் ஆயிரம்

நான் வாழ்ந்த காலம் ஆயிரம் ஆண்டுகள் இல்லை 
நான் தேக்கிய காதல் சாவது காலக்கணக்கில் இல்லை 

Tuesday, April 1, 2014

காற்றிலே காதல் வந்தது

காற்றிலே காதல் வந்தது
என் சுவாசம் ஆனது
மழையிலே காதல் வந்தது
ஒரு காய்ச்சல் தந்தது
என்னுள் ஏதோ ஆகின்றது
இதுதான் காதல் சொல்லாமல்
சொல்கின்றது
நிலம் சூழ்ந்த கடலாகவே
உன் காதல் உள்ளுக்குள்ளே
அழகான தீவாகவே
உன் முகம் அதன் நடுவிலே

Tuesday, March 18, 2014

தாயவள் அன்பு மகற்கு

தாயவள் அன்பு மகற்கு
புரியாது விழியன் ஈரம்
கைகள் துடைக்க மறவாது
என்றறிந்த பேதை நீ
கண்ணன் னன்பை ஊரார்
மரப்பீனும் அங்கயர் தாம்
மறந்தேனும் கோவிப்பது முறையோ
அவனிடம் இல்லை ஒரு குறையே 

அவனது கூடத்தில் மாடக்குயில்

அவனது கூடத்தில் மாடக்குயில்
தான் கண்டது கனவோ
மையிட்ட கயல் விழியாள்
கண்ணிமைத்தாள்
வெற்றிடம் கீழெங்கும் சிவக்கும்
முன் எழுந்தேன் சிற்றிடை
இளைத்திட உன்னை நினைத்தேன்
தென்றலென மெல்ல வந்தாய்
புயலென பறந்திடாதே கண்ணா !

Monday, March 10, 2014

விண்ணளந்தான் உலகம் அளந்தான்

விண்ணளந்தான்  உலகம் அளந்தான்
குமரிப் பருவத்து ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான். வங்க
கடல் கடைந்தான் , கடைந்து முகர்ந்த
 நீரை மழையாக தரும் முகிலென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம்  கோமான் அன்பர்க்
எல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே !!

மன்னன் உருவாய் உயிராய்

மன்னன் உருவாய்  மங்கை உயிராய்
அமைத்து வாழ்வை வாழ்வாய்
உடலை பேணி உயர்வழக்கம் ஒழுகுவாய்
ஒழுகுதல் எவ்வன்னமேனில் மன்னன் உடலில்
உயிராய் வாழ்வாளே வாழியே வாழியே
என்று பெருமுழக்கமிட்டு மாலே
நீயே என்று சரணம் சொல்லு

உன் உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்

 உன்  உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்
குணம் கண்டு தரைமுட்டும் வான்மழை
பெருக்கெடுத்த வெள்ளம் நிலை
பணிந்து செல்லுமே மால் பனித்த
ஊழி காலத்து ஆழியும் சுழறாதே
வெண் மதிய வேதனை தீர்க்கும்
வேம்பின் நிழலாம் வாட்டும் வினை
வெம்மை தீர்க்கும் மனையாள் துணை

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்
சிந்தித்த அகமெல்லாம் தித்திக்க நிறைவாள்
வாழும் நிகழ்வுகள் வாழ்வில் தருவாள்
மூப்பாலும் மரிக்காது முக்காலம்வாழ்வாள்
மூஞாலத்து   முதல்வன் தான்கொண்ட அவள்
கரம் நீட்டினாள் அனந்தன் பாதத்தில் சரணமதற்க்கு
ஒப்பு. அவள் இளங்கதிர் பார்வை மேலே பட்டால்
புழுதாகும் பெரிதான மாசெல்லாம்!

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள்

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள் 
வழுக்கும் மேசை மேனியாள் அவள்
பால் வண்ண விழியிற் மால் வண்ண
முழியாள்  செழித்த குழல் கற்றை
சூடியவள் பழுத்த அங்கமுடையவள்
என்றும் நீரினை பிரியாத மச்சினை
போல உன்னை பிரியாது வாழ்வாள்
நீண்ட இராக்காலம் கூடி புணர்தலின்
இன்பம் வார்ப்பாள் அவள் என்றும் வாழியே வாழியே!

வடிவிள நங்கை நப்பினாய்

வடிவிள நங்கை நப்பினாய்  வாழியே
உரியவர்க்கு உரிதான துணையே வாழியே
பெற்றவர்க்கு பெரிதான அணியே வாழியே
தத்தெடுத்தார்க்கு மாற்றான மகளே வாழியே
உற்றார்க்க்கு வற்றாத அன்புக்கேனியே வாழியே
நீ ஈன்ற மகற்கு  குன்றா விளக்கே வாழியே
யாதுமாய் நீ நின்று வழிநடத்தும்
திருபாற்க்கடல் ஆதியே நீ வாழியே

Sunday, March 9, 2014

என் மனம் ஒரு கண்ணாடி

என் மனம் ஒரு கண்ணாடி
உன் முகம் வந்து விழுந்ததடி
பார்த்ததும் நீ ஓடிவிட்டாய்
மனம் பக்கென்று ஒட்டிக்கொண்டது
நான் வாழும் காலம் வரை
உன் முகமே என் முகத்திரை
இனி யார்  சொன்னாலும்  கழற்றமாட்டேன்
யார் பார்த்தாலும் விம்பம் கட்டமாட்டேன்

Friday, January 3, 2014

ஒரு மாலை பொழுதில் மனதை

ஒரு மாலை பொழுதில் மனதை
உருக்கி வசியம் செய்தால் எழும்பவில்லை
மறு காலை பொழுதில் வலியைக்
கொடுத்து பிரியச் சொன்னாய் நியாயமில்லை
பிரியாதே உயிரே! முடியாதோ கணவே !
உண்னை சேரும் நாள் தேடி நான்
தினமும் தினமும் தேதி கிழித்தேன்