Sunday, September 26, 2010

Vidhi(FATE)

விதி விதி எங்கே ? அதை அறிந்தவன் யார் இங்கே? பூக்கள் மலர்வது விதியென்றால் வண்டு மொய்ப்பது விதியா? பரிக்கபடுவது விதியா? ஒன்று போனால் மற்றொன்று பூக்கும் அதுதான் விதி 
இரவு என்பது விதியென்றால் பகல் என்பது விதியல்ல பூமி ஒன்று சுழல்வதில் தான்  பகலும் அங்கு விதியாகும் தோல்வியை நீயும் விதியென்றால் வெற்றி உனக்கு விதியல்ல பூமியை போலே உழைத்திடு கொஞ்சம் வெற்றி உனக்கு விதியாகும்

Friday, September 10, 2010

Nalam ariya aval

என்னிடத்தில் உன்னை வைத்தேன்
உன்னிடத்தில் என்னை தந்தேன்
நான் தந்த என்னை நீ வைத்திருக்கும்
இடம் என்ன ? கூறிவிடடி

கண்ணுக்குள் என்னை வைத்திருந்தால்
உன் இரவில் கணவாய் நான் இருப்பேன்

நெஞ்சுக்குள் என்னை வைத்திருந்தால்
உன் உயிருக்கு உயிராய் நான் துடிப்பேன்

குப்பை தொட்டியில் எரிந்தாலும்
அங்கும் சிரித்து கண்ணடிப்பேன்