அரசவை
கலை மண்டபத்திலிருந்து புறப்பட்ட மன்னன் நேரே அரசவைக்கு வந்தான். அவனுக்கு முழக்கத்துடன் , புகழும் வாச்கிக்கபட்டது.
மும்முடி தேவர், கொல்லம் கொண்டான் ,
கோ நேர் இன்மை கொண்டான் ,
ஸ்ரீ கோ மாறவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ குலசேகர தேவர்
வரார்! வரார்!!
தொடர்ந்து அரசவையில் என்ன நடந்தது என்பதை பின்வரும் உரையாடல் வழியே அறியலாம்.
சிம்மாசனத்தில் அமர்ந்த அரசன், அன்று வந்த தூதுவனை அழைத்து வருமாறு உத்தரவு இட்டான். உடனே காவலாலிகல் ஹோய்சால நாட்டு தூதுவனை அழைத்து வந்தனர்.
தூதுவன்: தமிழகம் மட்டுமல்லாது திராவிடம் முழுவதும் போற்றும் மாமன்னர், மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனுக்கு ஹோய்சால நாட்டு தூதுவனின் மதிப்பிற்குரிய வணக்கம்!
மன்னன்: வரவேண்டும் தூதுவனே! உங்கள் நாட்டு மன்னனும் மக்களும் நலமா?
தூதுவன்: யாவரும் நலமே
மன்னன்: மகிழ்ச்சி
பின் மன்னன் அமைச்சரை நோக்கி தகவலை அறியுமாறு ஏவினான்
இளம்பருதி: நீவிர் கொண்டு வந்த செய்தி யாதென இவ்வரசவை அறியுமாறு உரைப்பாயாக
தூதுவன் : நன்றி மன்னா! இவ்வரசவைக்கு கொண்டு வந்த செய்தி யாதெனில் ஹோய்சால நாட்டு மன்னரான மூன்றாம் பலாலர் இரு நாட்டிற்க்கும் இடையே நல்லுரவு அமைய, மாமன்னருடன், சிறிது காலம் தங்கி இருந்து
நட்புரவாட விருப்பம் தெரிவித்துள்ளார். தங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறார்.
இளம்பரிதி: நட்புரவாட வருவோர் யாராயினும் அன்புடன் வரவேர்த்து விருந்தோம்பல் செய்வது தமிழர் வழக்கம். வரவேற்பதில் முரண்பாடில்லை. வரவிருக்கும் திகதி யாதென செய்தி உண்டா?
தூதுவன்: தங்களுக்கு உகந்த திகதி எதுவாயினும் அன்றே விஜயம் செய்ய சம்மதம் எனபது செய்தி அரசே!
மீண்டும் அரசர் அமைச்சரை நோக்கினார்
இளம்பருதி: நன்றி தூதுவனே! திகதி யாதென அரசருடன் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். அது வரையில் நீர் உமக்கென தயார் செய்யப்பட்ட அரையில் தங்கி இரு. உனக்கு தேவையான பனிவிடைகள் அறுசுவை உணவுகள் யாதும் காலம் தாழ்த்தாது வழங்கப்படும். காவலாளிகள் அவரை அழைத்து செல்லுங்கள்.
அவன் சென்ற பின்னர் அமைச்சர் உரையாடலை தொடங்கினார்
இளம்பருதி: அரசே, வீர பலாலன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர பல முறை முயற்சி செய்து தோற்று போனவன். அவன் நட்புரவாட வருவதென்றால் சிறிது கவனம் தேவை.
மன்னன்: அதற்காக நமது நாட்டிற்க்கு வருவதை வேண்டாம் என்று சொல்வது நமக்கு இழிவாகும்
இளம்பருதி: மாமன்னா! அவன் வருவதை வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் அவனோடு உறவாடுகையில் சிறிது கவனம் தேவை என்பதே என் கருத்து.
மன்னன்: ஒப்புகொள்கிறேன் அமைச்சரே! மட்டற்ற அமைச்சர்கள் யாரேனும் கருது வைத்திருந்தால் உடனே கூற வேண்டும் !
மற்ற அமைச்சர்கள் ஒருங்கிணைந்த குரலில் "முதலமைச்சர் கூறுவதே எங்கள் கருத்தும். நாங்கள் அதை ஏற்கிறோம்" என்றனர்.
மன்னன்: நன்றி பெருமக்களே! இனி வீர பலாலனை வரவேற்கும் திகதியை கணித்திருந்தால் சொல்லி விடுங்கள்.
இளம்பருதி: அடுத்த திங்களுக்கு வர சொல்வது சரியாக இருக்கும் அரசே!
மன்னன்: ஆகட்டும்! அதுவே மன்னன் முடிவென்று கூறி தூதுவனை அனுப்பி வையுங்கள்.