Sunday, November 13, 2016

திங்கள் இருந்தும் குளிரில்லை மனதில்
வேகும் ஊடல் நமக்குள்
பிரிந்து சென்றாய் நீ ஏனடி
கரையும் நொடிகள் பிரிவின் வலிகள்
கண்ணீர் துளிகள் துடிக்கும் இதழ்கள்
கடிந்தேன் உன்னை நான் எனவே ஒடிந்தான்
மறவேன் உன்னை நான் என்பதை நீயும்
மறக்காதே டீ

நொடி நொடியாய் நேரம் கரைய
உன்னிடம் காதல் சொல்ல நான்
தவிப்பது வெறும் வீணோ
ஒவ்வொரு இரவும் நான் கண்ட கனவெல்லாம்
கரையும் நொடியோடு கரைந்திடுமோ
கடைக் கண் பார்வை என்னை ஏமாற்றுமோ
அருகில் நானும் வரலாம் உன் கைப்
பிடித்து காதல் கூற

அதை நீ தெரிவிக்க வேண்டும் பெண்னே