Saturday, April 20, 2013

காற்றே ! காற்றே !காற்றில் ஏன் கீதம் 

காற்றே ! காற்றே !
காற்றில் ஏன் கீதம் ஏற்றினேன்
காற்றே இதை காதலியிடம் சேர்த்துவிடு
காதலியின் ஆசை முகம்  பார்த்து
நெடு நாள் ஆனது
எழிலோடு அவள் மனதில் கொண்ட
இன்பத்தோடு இதழில்  இசைக்கும்
ரீங்காரம் கேட்டு நாள் ஆனது.
காற்றே ஏன் காதலை அவளிடம்
சொல்லி ஏற்று கொண்டால் பரிசளிப்பாள்
இல்லை என்றால் முரசொலிப்பாள்
பரிசோ முரசொ அவள் மூச்சு காற்றோடு
அதை என்னிடம் சேர்த்துவிடு.

என்றும் நீயே ஏன் பராபரமே

என்றும் நீயே ஏன் பராபரமே
துன்பம் சோகம் போட்டி கஷ்டம்
எந்த  நிலையிலும் உன் பெயரே
ஏன் நாமதயம். காதலை
நினைத்தாலே கரை தேற்றிவிடும்

விண்வெளியில் உலா வரும் வெண்ணிலவே
உண்னை என்றும் தேடும் பூமி நான்
பகலெல்லாம் காய்ந்து களைத்தேன்
தினம் இரவு உன்னன்பில் குளிர்ந்தேன்
அமாவாசை அன்றும் நீ என்னோடு
சிறிது விளையாடி கொண்டு தன்
இருப்பாய் ! பாவம் இவன் பிழைக்கட்டும்
என்று முன் வருவாய் 

Thursday, April 18, 2013

என்  வாழ்வில் வந்தாயே

என்  வாழ்வில் வந்தாயே தேவதையே
நீ வந்த ஒரு நாளே வாழ்வானதே
தினம் என் நினைவு இதை சொல்லி
என் மனதை ஆற்றுமே ஆனாலும்
மனம் உன்னை தினம் தேடுமே .

என் நெஞ்சம் ஒரு  குழந்தை போல
தினம் ஏங்கிற்று தாயாக நீ வந்து
அன்பை வார்ப்பாய் என்று ! என்னை
பொறுத்த மட்டும் உன் நிழலில் நான்
வாழ வரம் வேண்டும் .


Tuesday, April 16, 2013

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்
அன்று முதல் உறக்கத்தை ரசித்தேன்
கணவை தேடி. கணவு திரும்பவில்லை
ஆயினும் கணவு ஏன் நினைவில்
கருத்தாக உண்டு. கணவிலும் நீ
என்னை பிரிய மாட்டாய் என்று
சொல்லவே கணவாய் வந்தாயோ ?

Tuesday, April 9, 2013

கணக்கில்லா கவிதைகள் 

கணக்கில்லா கவிதைகள் எழுதி முடித்தும்
மீண்டும் மீண்டும் புதியன்தொன்று வெள்ளி
முளைப்பதை போல துள்ளி குதிக்குது 
உன் பெயரை கேட்கும் பொழுது நெஞ்சம் 
பதைபதைக்குது நீ ஏன் பெயரை சொல்லி 
கூப்பிட .

Thursday, April 4, 2013

எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு

எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு 
கண்ணுக்குளே உன்னைக்காண ஏக்கமுண்டு
வாய்திறந்து நிறைய பேச ஆசையுண்டு
கனவெல்லாம் நினைவாக்கும் வழி கண்டு
நின் காணும் கனவு பொழுது முடிந்திடும்
முன்னே வந்திருப்பேன் .