Monday, July 26, 2010

Fear to Propose

ஒரு  காகிதம்  எடுத்தேன்
என் காதல்  சொல்லவே

தொலை  பேசி  எடுத்து
உன்  நம்பர்  டயல்  செய்து
என்  காதல்  சொல்ல  நினைதேன்
ஏதோ  உளறி  வைத்தேன்

உன்  கண்ணில்  என்னடி  வித்தை
தொலைந்து  போனது  வார்த்தை
கண்கள்  திறந்து  வைத்து
கனவில்  வழக்கை  வாழ்ந்தேன்.

கனவில்  உன்னை  காணும்  போது 
ஏதேதோ  வார்த்தை  தோன்றும் 
அதை  எனென்று  நான்  சொல்லவே  !!

நேரில்  உன்னை  காணும்   போது 
ஏதோ ஏதோ  ஆகிறேன் 
வார்த்தை  ஏதும்  சொல்லாமல் 
செல்வேனே !!

என்  நிலைமை  அறிந்து  கொண்டு 
என்  காதல்  புரிந்து  கொண்டு 
வருவாயோ  சொல்லாயோ ?
I luv u!!



Thursday, July 22, 2010

A song for mother

ஆரிராரோ ஆரிராரோ  பாடி
நம்  தாய் சொல்வாள்  அழகிய  லாலி

தாயினும்  சிறந்த கோவிலும் இல்லை
மறுப்போர்  உலகில்  எங்கும்  இல்லை !!

அவள்  அன்பை  சொல்ல  வார்த்தை  இல்லை
சொல்வதற்கு  வார்த்தை தேவை இல்லை
உணவு  இருந்தும்  அவள்  உன்ன  மறுக்கிறாள்
குழந்தை  உண்டு  மிஞ்சும்  உணவையே  உண்கிறாள்

அவளாலே  நமக்கு  கிடைத்தது  ஜனனம்
அவளின்றி  இங்கு  ஏது  மனித  கூட்டம் !!
பஞ்சு மெத்தைகள் தேவை  இல்லையே ..
தாயின் மடியில்  ஓர்  உறக்கம்  போதுமே !!
வெண்  நிலவை  பிடித்து  தான்  சோறும் ஊட்டுவாள்
கையில்  தங்கி  தான் நடையும் பழக்குவாள் !

பிள்ளை  நேற்றயில் பொட்டு  வைத்து  தான் ..

கையால்  கண்களை  காத்து நின்று  தான் .
மெல்ல  ஊதுவால்!!

தென்றல் இங்கு  அதற்கு  இடிள்ளை!!
இந்த  மண்ணில்
அவளுக்கு  யாரும்  இணை  இல்லை !!


அவள்  உறவு  மண்ணில்  வந்ததால்
தெய்வங்களும்  இங்கு  வாழ  துடிக்கும் !!

Wednesday, July 21, 2010

A poem for my friend

நண்பனே  நண்பனே
எந்தன்  உயிர்  நண்பனே

தேடினேன்  தேடினேன்
உன்னை  எங்கும்  தேடினேன்
என்னுடன்  நீ  இருந்தாய்  உன்னை  நான்
மறந்தேன்.


என்னுடன்  சிரித்து  என்னுடன்  அழுது
என்னுளே  வாழ்ந்தது  நீயா ?


நீ  எபோழுதும்  எனக்காக   வாழ்ந்தாய்
இன்று  தனியாக  நான்  இறுக்க
நீ  பிரிந்து  ஏன்  சென்றாய் ?

நாளை  நீ  மீண்டும்  வரலாம்
ஏன்  மனசு  அடிகடி  சொல்லும்
அந்த  ஞாபகம்  ஒன்றே
நான் வாழ போதும்

நட்புக்கு  இந்த  ஊரில்
அட சின்னங்கள் ஏதும்  இல்லை
நான்  வாழ்ந்த  காலங்கள்
நம்  நட்பின்  சின்னம்  ஆகும் !!

சின்ன  சின்ன  சண்டை 
நமக்குள்  வந்து  போகும்
எந்த  சண்டை   வந்தும்
நம்  நட்பு  என்றும்  வாழும் !!

நாம்  சேர்ந்து  சிரித்தோம்  அன்று
தனியே  நான்  அழுவது  இன்று ,
கண்ணீர்  தொடைக்க  வா  வா
சேர்ந்து  சிரிப்போம்  நண்பா !!!


--
rajagopal

A short poem on lonliness

காதலியே  காதலியே
நீ  எங்கே  எங்கே ??
நீ  எங்கே , நானும் வாழ்வேன்
அங்கே  அங்கே !

கொள்ளுகின்ற  தனிமை  அடி ,
நெஞ்சில்  ஏனோ  கலக்கம்  அடி ,
சுவர்களே இங்கு இருந்தாலும் ,
சிறையை போல வழக்கை அடி .

சுவர்கள்  எல்லாம்  உன்  முகமாக ,
உன்  கண்களே  அதில்  ஜன்னல்  ஆகும் .
கண்கள்  மூடி  சாய்ந்தாலும் ,
கனவில்  கூட  தனிமை  அடி .

தனிமை  கூட  சுகம்  தானே ,
ஏன்  பக்கம்  நீ  இருந்தால் .
இதயம்  இரண்டும்  இடம்  பெயர ,
தனிமை கூட  சுகம்  தானே !!

தனிமை  இங்கு இருக்கனுமே ,
நாம்  இர்ருவர்  மட்டும் இருக்கனுமே .
கண்கள்  இதழ்கள்  பேசி  கொள்ள ,
தனிமை  நமக்கு இருக்கனுமே !
--
rajagopal