முன்னுரையாக நாம் கதை மாந்தர்களையும் கதைக்கான காரணத்தையும், வரலாற்று சுவடுகலையும் கண்டு வந்ததால் காண தவறியதை இனி காண்போம், மதுரையின் எழிலையும், அரசவியின் அமைப்பு, கோட்டை அமைப்பு, ரங்கா நாயகியின் அழகிய வனப்பு மற்றும் ரங்கனின் திறனும் ரங்கா நாயகியை பற்றி புகழ் உரைப்பதும் என பல் வேறு நிகழ்வுகளை காணப் போகிறோம். இனி அதையெல்லாம் கண்டு களிப்போம். முதலில் மதுரையை பற்றியும் அங்கு தங்கி இருக்கும் ஒற்றனாலும் வர விருக்கும் கேடென்ன எனபது பற்றி காண்போம்
இரு கோட்டை சுவர்களைக் கொண்டு கம்பீரமாக விளங்கியது பாண்டிய நாடு. அரசரின் அரண்மனையை சுற்றிலும் பெரும் அகழிகளும் பலத்த கவல்களும் இருந்தன. மறுபுறம் பெரிய நந்தவனமும் எழில்மிகு சிற்ப வேலைபாடுகளும் சேர்ந்து மிக பரந்த அரண்மனையின் அழகை மேம்படுத்திக் கொண்டு திகழ்ந்தது. அரண்மனையின் அகண்ட இடம், இன்னும் பல கலை வேலைபாடுகளை உண்ண துடித்து வாய் திறந்தே காத்திருந்தது. அங்கு தினமும் பல முக்கியமான வியாபாரிகளும் செல்வந்தர்களும் வந்து போவதாய் இருந்தாலும் எளிய மக்கள் மற்றும் புலவர்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தது. அவரவர் குறைகளையும், விண்ணபங்களையும் கூறி நிவர்த்தி செய்து கொண்டனர். மன்னர் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் எளிய குடிமக்களின் குறையை தீர்க்கவே பெரும் அமைப்புகள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. அவர்களின் முறையானது கீழ்வருமாறு
பாண்டியனின் அரசவை ஐம்பெருங்குழுவாக பிரிக்கப்பட்டது. அவை யாதெனில் மாசனம், பார்ப்பார், மருத்தர், நிமித்தர், அமைச்சர். அரசனின் சேவையில் மேலும் எட்டு நபர்கள் நியமிக்கபட்டனர் . அவர்கள் எண்பேராயம் என வழங்கப்பட்டனர்.
மன்னன் தனது நாட்டை கூற்றங்கலாக பிரித்து ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒரு ஆளுநரை நியமித்தான். பொதுவாக இரு இளவரசர்கள் இருந்தால், மூத்தவர் மன்னராக, தலைநகரிலிருந்து செய்ய மற்றவர் ஒரு கூற்றத்திலிருந்து ஆட்சி செய்வார். ஒவ்வொரு கூற்றமும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு மண்டலமும் நாடு என பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டில் உள்ள கிராமங்கள் ஊர் என வகுத்து, ஒவ்வொரு ஊரின் உட்பிரிவுகள் சேரி என வழங்கப்பட்டன. ஊர்களின் ஆட்சி அங்குள்ள வயது முதியவரும் அறிவில் சிறந்தவருமாக இருப்பவரிடம் கொடுக்கப்பட்டது. இரு அமைப்புகள் ஊர்களை ஆட்சி செய்தன. அவை மன்றம் மற்றும் அம்பலம். மன்றம் என்பது ஒரு சிறியஅமைப்பு, ஏதேனும் மரத்தின் கீழ் அமைக்கபெரும். அம்பலம் என்பது பெரிய அளவிலான அமைப்பு. அதற்க்கென தனி கட்டிடம் உண்டு. இவை இரண்டும் ஊர்களின் பொது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு அரசாணையினை ஊருக்கு அறிவிப்பது நிலா ஆய்வு போன்ற வேலைகளை செய்தது. வரி வசூலிப்பது போன்றவை தனி அதிகாரிகளால் வசூலிக்கப்ட்டது.
இவை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் ஏனென்றால் நமது முன்னோர் கொண்ட ஆட்சி திறன், பாரதத்தின் பல இடங்களில் நாகரீகம் வளரும் முன்பே, தமிழர் ஆட்சி, அரசியல் இவைகளில் திறம் பெற தேர்ச்சி பெற்றவர் என்பதை பறைசாற்ற பட வேண்டும். மேலும் இக்கதையின் சில நிகழ்வுகளை புரிந்து கொள்ள தேவை படும்.
இவ்வாறென பல போகங்கள் நிறைந்து இருந்தாலும், நாட்டிலும் அரச குடும்பத்திலும் சஞ்சலங்கள் இருக்கவே செய்தன. நாட்டில் இன்னும் சாதி வேறுபாடுகள் அதிகமாக துளிர் விட்டன. தேவதாசி முறையும் கடைபிடிக்க பட்டு வந்தது. தேவதாசிகள் இறைவனுக்காக வளர்க்கப்பட்டவர்கள். அவர்களை தேவர் அடிகளார் என்றும் அழைப்பர். இந்த வழிமுறை தான் பின்பு
தாசியாட்டம் என மருவ பட்டது அதற்க்கு காரணம் நமது தமிழ் மன்னர்களின்
ஆட்சி வீழ்ந்து அயலார் கைகளில் சிக்கிய பின் பல நூற்றாண்டுகளாய் சிதைக்கப்பட்டது . செல்வந்தர்களின் சுகத்துக்காக மாற்றி இயற்றப்பட்டது.அப்படி ஒரு தேவதாசியிடம் தான் பிரியா நாட்டியம் பயின்றாள். அங்கே அவளுக்கு உற்ற தோழி ஒருத்தியும் இருந்தாள். இருவரும் இணைந்தே நடனம் பயின்றனர். பாவத்திலும், அழகிலும், ஆட்டத்திலும் ஒருவருக்கொருவர் சலிதவரில்லை.
தமிழர்களுக்கு இடையே அவ்வப்பொழுது ஒற்றுமை குன்றியும் மிஞ்சியும் இருந்து வந்ததுள்ளது. முன்பு சோழ, சேர, பாண்டியர்களாய் பிரிந்து இருந்து போர் செய்தனர். இடையில் ஒரு நூற்றாண்டிற்கு மேல் ஒற்றுமை காத்தனர். மறுபடியும் சோழர் உயர்ந்தும் பாண்டியர் மறைந்தும், இப்பொழுது பாண்டியர் உயர்ந்தும் சோழர் மறித்தும் சேரர் ஒதுங்கியும் வாழ்கின்றனர். ஆயினும் மக்களிடையே ஓரின உணர்வு இருக்கவே செய்தது.
மேற்கண்டது நாட்டின் நிலையே. அரசவையை நோக்கி கவனிப்போம். ஒற்றன் சென்ற பிறகு அரசர் தமது இளவரசர்களை சந்திக்க நினைத்து அவர்களை அழைத்திருந்தார். பாட சாலையில் பயிற்சி பெற்று வரும் அவர்களும் வந்து சேர்ந்தனர். மன்னர் காலை விடிந்தவுடன் அரசவையைக் கூட்டி தான் முக்கிய முடிவு எடுக்கப் போவதாகவும் பட்டம் சூடப் போகும் காரியம் என்றும் கூறி தனது அமைச்சர்களை அழைத்தார். இளவரசர்கள் வழக்கம் போல் போரபயிற்சிகள் மற்றும் இதர கலைப்பயிர்சிகள், அரச தந்திரம் முதலியவற்றை பயின்று அவரவருக்கான அந்தவனத்தில் தேவதாசிகளின் நடனங்களை கண்டு கொண்டிருந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்தவர்கள் ஒற்றுமையுடன் வளர்ந்தவர்கள். மூத்தவன் பலத்த வீரனாக இருந்தாலும் விவேகத்தில் இளையவனை விட சற்றே தளைத்தவன். இந்த தகவல் அரண்மனையில் உள்ள வீரர்களுக்கும் தெரிந்ததே. அவர்கள் இது பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளவும் செய்தனர். ஒற்றன் விடுதிக்கருகில் இருந்த காவலர்களும்
இதைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை ஹோய்சால தூதன் கேட்டுக் கொண்டான். தன மன்னர் தம்மை இங்கு அனுப்பியது எதற்காகவோ அந்த தகவலை உறுதியாக அறிந்து கொண்டான். இவர்களைப் பற்றி அரசர் அறிந்திருந்ததால் பட்டத்தை சூட்டுவது என்பது பற்றி ஆலோசிக்கவே அரசவையை கூட்டியிருந்தார். அங்கு வழக்கம் போல மூத்தவருக்கு என்று ஒரு கட்சியும் இளையவருக்கென்று ஒரு கட்சியும் இருந்தது.
அரசர் பேச்சை ஆரம்பித்து, "நான் அமைச்சர் பெருமக்களை வரச் சொல்லியதின் காரணத்தை அனைவரும் அறிந்திருப்பீர். எனினும் நானே உரைக்கிறேன். நம் இரு இளவரசர்களில் பட்டத்துக்கு தகுதியானவர் யார் என்பது பற்றி தங்கள் கருத்தை கூறுங்கள்". அவர்கள் கூறியது தான் தாமதம், ஆயத்தமாய் இருந்த மூத்தவரின் கட்சி ஒருமித்தமாக தன் வாக்கை அளித்தது. அரசர் தான் எதிர்பார்த்தது போல் நடக்கவே, புன்னகையுடன், இருவரின் தனிச் சிறப்புகள் தனித்தனியே எடுத்து கூறுங்கள்". என்றார்.