Saturday, October 26, 2013

சொக்கன் எங்கே தேடினேன்

சொக்கன் எங்கே தேடினேன்
சொக்கன் என்று கேட்டேன்
சொக்கனை இன்று பார்த்தேன்
காளையர் மனம் கொள்ளும் கண்ணியர் சொக்கன்
மட்டுமல்ல காளையர் மனமும் கொள்ளும் சொக்கன்
இவன் என்று அறிந்தேன்.
மல்லி பூ முல்லை பூ அறிவேன்
மல்லி போல் முல்லை போல் அவனையும்
நுகர்ந்தேன்

Wednesday, October 16, 2013

காதல் காதல் சாகும் வரை காதல்

காதல் காதல்  சாகும் வரை காதல்
ஊடல் ஊடல் உனக்கேன்  ஊடல்
கூடல் கூடல் கூடி வாழ கூடல்
பாடல் பாடல் இனியது உன் பாடல்
தேடல் தேடல் நீயே என் தேடல்
வாடல் வாடல் உன்னால்  நான் வாடல்
சாடல் சாடல் குற்றமென்மேல் சாடல்
நாடல் நாடல் உன்னை  நான் நாடல்
மோதல் மோதல் கண்ட நாள் மோதல் 
காணல் காணல் தேடித்தேடி உன்னை  காணால்
மின்னல் மின்னல் நெஞ்சில் மின்னல்
இன்னல் இன்னல் இனிப்பது இன்னல்

Friday, October 11, 2013

பொருள் போனால் போகட்டும்

பொருள் போனால் போகட்டும்
காலம் போனால் போகட்டும்
என்னுடன் நீ இருந்த நேரம் மட்டும்
தேங்கட்டும் ஆடி தீர்த்த மழை
முற்றத்து த்தொட்டியில் தங்கியது போல 

Monday, October 7, 2013

இமை கூடி விழி மூடும் தூக்கம்

இமை கூடி விழி மூடும் தூக்கம்
உண்னை  காண மனம் கொண்டது ஏக்கம்
 கண் முன் கணவாய் வந்தவளே
கனவே வாழ்வாய் தந்தவளே
காதலின் பொருள் வெவ்வேறாக யாவரும் அறிவர்
காதலின் பொருள் நீயென்று  நான் மட்டும் அறிந்தேன்