Thursday, July 13, 2017

கள்வனே கண்ணா - Kalvanae Kanna

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கலைந்தது கனவே விடிந்தது பொழுதோ
என்றால் அல்லும் வரவில்லை

மாலை வருவாயா என்னை
மணம் கொள்வாயா இல்லை
வராது மனம் வருத்திக் கொல்வாயா
பகலும் காத்திருந்து கழித்தேன்
இனி இரவும் வந்தது உடன்
கொல்லும் தனிமை என்னை
கொள்வது அறிந்திட மாட்டாயா

குழலூதி என் மனதை கவர்ந்தான்
என் மேய் தொழில் கெடவும் செய்தான்
அழுதேமா என்றால் என்னை முயங்கு
ஆநிரை கவர்ந்து இங்கு வருவேனென்றான்

என்னாய் புது வெண்ணெய் மனையில்
உயரே வைத்தாள் கள்ளஞ் சொல்லி
என்னை ஏவினான் தின்ன கிடைத்ததும்
உனக்கேனடி என்றே ஏங்க வைத்தான்

கள்ளவிழ் பூங்காவில் கொங்கு தேர்
வண்டுகளே கண்ணனிடம் செப்புவீரோ
பசலை உயிர் உருக்க இவள் வாடினாள்
புலம்பு அறுக்க வருவீரே என்று

கலனும் ஏந்தாது கன்றும் பருகாது
வீணே சேறாக்கும் ஆமுலை பாலன்னது
அரிவை அழகு பெருங்கடல் குடிக்கும்
மேகங்காள் கண்ணனிடம் இவை செப்புவீரோ

முள் வளர் சுரமிடை நிரை மேய்ப்போன்
எல் உள்ளளவு திரிவோன் குழல்
இசைக்கும் துளையிடை வாய்நீர்க்கும்
ஏங்கியதை நாடோடி காற்றே செப்புவீரோ

சிற்றில் சிதைத்தும் கோதை அறுத்தும்
மனங்கொள்ளன் மணம் கொள்வேனென
சொல்லுரைத்தவன் வருகைஇல் என் திசை
வரக் கண்டு கூவுவாயோ பொந்திடை குயிலே

கண்ணனே என்று வருவாயோ
இரவும் வந்தது வருத்திக்
கொல்லும் தனிமையும் தந்தது
அல்லினில் உடையே இணைப்பில்
சிறைப்படுத்த வருக பெண்ணாகம்
விழையும் வாயமுதம் தருவாயோ
மரபு முறை மணம் கொள்வாயோ

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது

No comments:

Post a Comment