நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரையோய்க் கூறாய்
சீர்தொலை முகமொடு கையில் தனிச்
சிலம்பேந்தி வந்தோய்
ஆர்வேல் காவலர் இடர்ந்தும் புறந்தள்ளி
வந்தோய்க் கொற்றவை
உருக்கொள் பெண்ணே அமிளி யோடிங்கு
புகுந்ததேன் கூறாய்
ஊழ்வினை உருத்த பொருளோடு புகழும்
இழந்துகெட துணையோடு
வாழ்தல் வேண்டீஇ நின்நகர் வந்தோம்
படிறில்லாப் பெருமாட்டி நின்
கழற்சிலம்பு பகர்ந்து பொருள் கொள்
வோமெனவந்த கணவனை
கள்வனென உன்நீதிக் கொன்றக் கோவலன்
மனைவி கண்ணகி யானே
கள்வனைக் கூற்றுக் கிரையாக வகுத்தல்
சான்றேர் அறமேஎ நீ
கலங்கியே எம்முன் வந்தோய் இருந்தும்
வீழ்ந்தது மீளாது என்ப
கோவலன் தேவி இஃதறியாது இவ்விடத்தே
வழக்கெடுத்துத் தென்னவர்
கோமான் எம்முன் வந்தோய்ச் செல்வோய்
அரசவை தான் விடுத்து
கேளாது முடிவுரைத்த கொடுங் கோலரசே
கள்வன் நீயே ஆகுக
கேள்வனே கள்வன் என்னுடை யாரல்லர்
அவையோரே கேன்மின்
இச்செயலும் முறையோ கன்றுக் கிரங்கி
மகனைக் கொன்றவர்
சோழத் தேவர் செருக் குடைமையால்
அறங்கொன்றவன் நீ ஆகுக
அல்லவே கண்ணகி படிறுதேரா முடிவு
உரைத்தேன் அல்லவே
உண்டோச் சான்று நின்வழக்கு வலியுற
அதையும் இவ்வேக் கூறாய்
அல்லவே மன்னவ என்கோவலர் கள்ளன்
அல்லவே தேராமன்னா
உண்டிங்குச் சான்று துணைஇல் என்கழற்
சிலம்பு உரைக்கும் கேன்மின்
குலையிழைப் பெண்னே நின் தனிச்சிலம்பு
தருகவெனப் பெற்றான்
கூடியிருந்தோர் முன்னே அவள் சிலம்பு
புடைப்ப உதிர்த்தது
மணிகள் காணோய் மன்னவ நின் தேவியின்
சிலம்பு களிரண்டும்
புடைப்போய் ஒன்று உதிர்ப்பது மணிகள்
அறக்கேட்டை அறிவோய்
கோப்பெருந் தேவியின் சிலம்பி லொன்று
உரைத்தது உண்மை
கோவலர் பாற்குற்றம் அல்ல தானேஅறம்
வழுவினன் என்றோ
கோமானே பதறிதரை யினிற்வீழ்ந் தீரோ
வளைந்த உம்செங்
கோல்நேர் படவையம் இறந்தோய் இவ்வே
தேவி யானும் இறப்பேன்
உழுவை வெருக்கொள உருக்கொள் வல்
யவனரைப் பணித்த
செழியா சரியும் நின்குடை அந்நிழலில்
வாழ்ந்த தமிழ் வளர்
கழகநகர் முழுதும் இரையெனத் தீகொள்ள
யானும் என் இடமுலை
கிழித்தேன் துணையில்லாதினி உயிர் வளர்
கடவேன் ஆவிப் பிரிவேன்
அதையும் இவ்வேக் கூறாய்
அல்லவே மன்னவ என்கோவலர் கள்ளன்
அல்லவே தேராமன்னா
உண்டிங்குச் சான்று துணைஇல் என்கழற்
சிலம்பு உரைக்கும் கேன்மின்
குலையிழைப் பெண்னே நின் தனிச்சிலம்பு
தருகவெனப் பெற்றான்
கூடியிருந்தோர் முன்னே அவள் சிலம்பு
புடைப்ப உதிர்த்தது
மணிகள் காணோய் மன்னவ நின் தேவியின்
சிலம்பு களிரண்டும்
புடைப்போய் ஒன்று உதிர்ப்பது மணிகள்
அறக்கேட்டை அறிவோய்
கோப்பெருந் தேவியின் சிலம்பி லொன்று
உரைத்தது உண்மை
கோவலர் பாற்குற்றம் அல்ல தானேஅறம்
வழுவினன் என்றோ
கோமானே பதறிதரை யினிற்வீழ்ந் தீரோ
வளைந்த உம்செங்
கோல்நேர் படவையம் இறந்தோய் இவ்வே
தேவி யானும் இறப்பேன்
உழுவை வெருக்கொள உருக்கொள் வல்
யவனரைப் பணித்த
செழியா சரியும் நின்குடை அந்நிழலில்
வாழ்ந்த தமிழ் வளர்
கழகநகர் முழுதும் இரையெனத் தீகொள்ள
யானும் என் இடமுலை
கிழித்தேன் துணையில்லாதினி உயிர் வளர்
கடவேன் ஆவிப் பிரிவேன்
No comments:
Post a Comment