Tuesday, August 10, 2010

Break out

விழியிலே இன்று நீர் துளி
துடைத்திட அவன் இல்லை

மனதிலே ரண வலி
அறுதல் தர வில்லை

காரணம் அது எதுவோ
அதை கூற மறுப்பதேனோ
காரணம் அது இருந்தாலும்
என்னை மறுப்பதேனோ

குடை ஒன்றில் இருவரும்
மழையினில் நினைந்தோமே

கண்ணிரண்டில் இன்று மட்டும்
மழை வெள்ளம் பெருகுதே

எந்தன் பிழை என்னவென்று
எனக்கு அது தெரியல
தெரிந்தால் நீயே பொறுத்திடு

உந்தன் பிழை எதுவென்று
இருந்தாலும் உணர மறுக்கிறேன்
உணர்ந்தாலும் அதை ஏற்கிறேன்
எனக்கானவன் இங்கு நீ மட்டும் தான்.

1 comment: