Friday, August 13, 2010

Moi girl

கண்கள் இரண்டால் காதல் தந்தாள் ஒருத்தி
வெளிவரும் மூச்சை புயலாக்கும் அழகி
பழ ரச இதழில் என்னுயிரை குடிக்கும்
இவள் ஒரு அரக்கி

அவள் ஒரு அழகி
மெல்லின அரசி
புல்லினம் மனதில் ஆசை தூண்டும்
மன்மத ராணி
கொடுத்து வைத்தவன் யாரோ
இந்த பூவை மணப்பவன் தானோ !

உன் செவியரண்டும்
என் கண்ணிரண்டை திருடுதடி
உன் கனி இதழ்கள் அதை
சுவைக்க சொல்லி
ஆசையும் தூண்டுதடி

பெண்ணினமே உன் கூந்தலிலே சிறு
பூக்களாக ஆசை உண்டு

வாய் திறந்து நீ பாட பாட உன்
தாகம் தீர்க்கும் சேவை
செய்ய ஆசை உண்டு

பளபளக்கும் கன்னங்கள்
கோலமிடும் பாதங்கள்
மருதாணி தோற்று நிற்கும்
சிவந்திருக்கும் உன் கைகள்
பார்த்தாலே ஆசை வரும்
கண்ணெல்லாம் சொக்கி போகும் 

சுண்டுவிரல் போல இருக்குது இடுப்பு 
அது தாண்டி உனக்கு ரொம்ப அழகு
பூவை போல் மென்மை
உன் பெண்மை
இன்னல் தரும் கயவரை கண்டால் 
புயலாகும் அது ரொம்ப அருமை

கணிரண்டை பறிக்கும் நீ ஒரு சிற்பம்
மேலும் அழகு சேர்க்கும்  உன் இரு சிகரம்
பட்டாடை  பூவும் பொட்டும் வைத்து
என் முன்னே நீ வந்து நின்றால் 
மனசெல்லாம் மயங்கி தான் போகும்
உன் நினைவால் பயிதியங்கள் பிடிக்கும்

No comments:

Post a Comment